caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 137

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:137

فَإِنْ ءَامَنُوا۟ بِمِثْلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهْتَدَوا۟ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا هُمْ فِى شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ ٱللَّهُ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எதைக் கொண்டு நம்பிக்கை கொண்டீர்களோ அது போன்றே அவர்கள் நம்பிக்கை கொண்டால் திட்டமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் (புறக்கணித்து) திரும்பினால் அவர்களெல்லாம் (வீண்) முரண்பாட்டிலில்தான் இருக்கின்றனர். ஆக, அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஆக, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எப்படி நம்பிக்கை கொண்டீர்களோ அது போன்றே அவர்கள் நம்பிக்கை கொண்டால் திட்டமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் புறக்கணித்தால் அவர்களெல்லாம் வீண் முரண்பாட்டில்தான் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi137. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். (நபியே!) அவர்களைப் பற்றி உமக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70