وَقَالَتِ ٱلْيَهُودُ لَيْسَتِ ٱلنَّصَٰرَىٰ عَلَىٰ شَىْءٍ وَقَالَتِ ٱلنَّصَٰرَىٰ لَيْسَتِ ٱلْيَهُودُ عَلَىٰ شَىْءٍ وَهُمْ يَتْلُونَ ٱلْكِتَٰبَ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ فَٱللَّهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகிறித்துவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை என யூதர்கள் கூறினார்கள். யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை எனக் கிறித்துவர்கள் கூறினார்கள். அவர்களுமோ (ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவர்களுடைய கூற்றைப் போன்றே (வேதத்தை) அறியாத (இணைவைத்து வணங்குப)வர்கள் (யூதர்களும் கிறித்துவர்களும் எம்மார்க்கத்திலும் இல்லை எனக்) கூறினார்கள். இவர்கள் தர்க்கித்துக் கொண்டு இருந்ததில் மறுமை நாளன்று அல்லாஹ் இவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், கிறித்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை என யூதர்கள் கூறினார்கள். இன்னும் யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை எனக் கிறித்தவர்கள் கூறினார்கள். அவர்களோ (ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவ்வாறே இவர்களுடைய கூற்றைப் போன்று (வேதத்தை) அறியாதவர்கள் (யூதர்களும் கிறித்தவர்களும் பின்பற்றுவது மார்க்கமே இல்லை எனக்) கூறினார்கள். ஆக, இவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ அதில் மறுமை நாளன்று அல்லாஹ் இவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi113. இன்னும், ‘‘கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வான்ற) ‘‘யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால், இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் ‘பழைய ஏற்பாடாகிய' தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தை(த்தான்) ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக்கொள்வது போலவே (வேதத்தை) அறியாத (இணைவைத்து வணங்குப)வர்கள் (‘‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல'' எனக்) கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.