وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَٰجِدَ ٱللَّهِ أَن يُذْكَرَ فِيهَا ٱسْمُهُۥ وَسَعَىٰ فِى خَرَابِهَآ أُو۟لَٰٓئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَآ إِلَّا خَآئِفِينَ لَهُمْ فِى ٱلدُّنْيَا خِزْىٌ وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவை பாழாகுவதில் முயற்சித்தவனைவிட மகா அநியாயக்காரன் யார்? பயந்தவர்களாகவே தவிர அவற்றில் நுழைய அவர்களுக்கு அனுமதி இருக்கவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும். அவர்களுக்கு மறுமையில் பெரிய வேதனையுமுண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவை பாழாகுவதில் முயற்சி செய்பவனை விட மகா அநியாயக்காரன் யார்? அவர்களோ பயந்தவர்களாகவே தவிர அவற்றில் நுழைய அவர்களுக்கு அனுமதி இருக்கவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. இன்னும் அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi114. அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அஞ்சியவர்களாகவே தவிர அவற்றில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு.