caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 112

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:112

بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُۥٓ أَجْرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறன்று! எவர் அவர் நன்மை செய்பவராக தன் முகத்தை (முற்றிலும்) அல்லாஹ்வுக்குப் பணியவைத்தாரோ அவருக்கே அவருடைய கூலி அவருடைய இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவ்வாறன்று! எவர், தான் நன்மை செய்பவராக இருந்த நிலையில் தனது முகத்தை (முற்றிலும்) அல்லாஹ்விற்குப் பணியவைப்பாரோ, அவருக்கு அவருடைய கூலி அவருடைய இறைவனிடம் (நிறைவாக) உண்டு. இன்னும், அவர்கள் மீது பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi112. (உண்மை) அவ்வாறல்ல! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறாரோ அவருக்கே அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. மேலும், இவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; இவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70