caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Ra'd அத்தியாயம், வசனம் 39

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 96 · 13:39

يَمْحُوا۟ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ وَعِندَهُۥٓ أُمُّ ٱلْكِتَٰبِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அதில்) அவன் நாடியதை (தவணை வந்தவுடன் நிகழ்த்தி முடித்து) அழிக்கிறான்; (அவன் நாடியதை தவணை வரை) தரிபடுத்துகிறான். அவனிடம் தான் தாய் புத்தகம் இருக்கிறது.
Tamil Translation - Omar Sharif(அதில்) அவன் நாடியதை (தவணை வந்தவுடன் அதை நிகழ்த்தி முடித்து) அழித்து விடுகிறான்; இன்னும், (அவன் நாடியதை தவணை வரும் வரை அதில்) தரிபடுத்தி வைக்கிறான். மேலும், அவனிடம்தான் விதியுனுடைய மூல நூல் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi39. (எனினும், அதில்) அவன் நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லாக் காரியங்களும் தவறாது நடைபெறும்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70