وَإِن مَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَٰغُ وَعَلَيْنَا ٱلْحِسَابُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை உமக்கு நிச்சயமாக நாம் காண்பித்தால் (அது நமது நாட்டப்படியே நடந்தது) அல்லது (அதற்கு முன்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொள்வோம். ஆகவே, உம்மீது (சுமத்தப்பட்ட கடமை) எல்லாம் எடுத்துரைப்பதுதான்! நம்மீதுதான் விசாரணை இருக்கிறது. (பாவிகளை நம் நாட்டப்படிதான் நாம் தண்டிப்போம். உமது விருப்பப்படியோ அவர்களின் விருப்பப்படியோ இல்லை.)
Tamil Translation - Omar Sharif(நபியே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நிச்சயமாக நாம் காண்பித்தால் (அது நமது நாட்டப்படியே நடந்தது); அல்லது, (அதற்கு முன்பே) நாம் உம்மை உயிர் கைப்பற்றிக் கொண்டால் (அதுவும் நமது நாட்டப்படியே நடந்ததாகும்). உம்மீது (சுமத்தப்பட்ட) கடமை எல்லாம் (இந்த மார்க்கத்தை எல்லோருக்கும்) எடுத்துரைப்பதுதான்! மேலும், விசாரணை செய்வதோ நம்மீது கடமையாக இருக்கிறது. (பாவிகளை நாம் நமது நாட்டப்படிதான் தண்டிப்போம். உமது விருப்பப்படியோ, அவர்களின் விருப்பப்படியோ இல்லை.)
Tamil Translation - Abdulhamid Baqawi40. (நபியே!) அவர்களுக்கு (வருமென) நாம் வாக்களித்த (தண்டனைகளில்) சிலவற்றை (நீர் உயிருடன் இருக்கும்போதே) உமது கண்ணால் காணும்படி செய்தாலும் அல்லது (அது வருவதற்கு முன்னர்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்!) உமது கடமையெல்லாம் தூதை சேர்ப்பிப்பதுதான்! (அவர்களிடம் அதன்) கணக்கை வாங்குவது நம் கடமையாகும்.