وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَٰجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்களை அனுப்பி இருக்கிறோம். அவர்களுக்கு(ம்) மனைவிகளையும் சந்ததியையும் ஆக்கினோம். அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அத்தாட்சியைக் கொண்டு வருவது எந்த தூதருக்கும் முடியாது. ஒவ்வொரு தவணைக்கும் (குறிக்கப்பட்ட) ஒரு விதி உள்ளது.
Tamil Translation - Omar Sharifமேலும், (நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்களை திட்டவட்டமாக அனுப்பி இருக்கிறோம். இன்னும், அவர்களுக்கு மனைவிகளையும் சந்ததியையும் ஏற்படுத்தினோம். மேலும், அல்லாஹ்வின் அனுமதியினால் தவிர ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவது எந்த தூதராலும் முடியாது. ஒவ்வொரு தவணைக்கும் (அது எழுதப்பட்ட) ஒரு நூல் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi38. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். (உம்மைப் போலவே) அவர்களுக்கும் மனைவிகளையும், சந்ததிகளையும் கொடுத்திருந்தோம். (ஆகவே, உமக்கு மனைவி, மக்கள் இருப்பதைப் பற்றி இவர்கள் குறை கூறமுடியாது.) அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒரு தூதர் எத்தகைய அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கில்லை. (அவன் முடிவு செய்திருக்கும்) ஒவ்வொன்றுக்கும் தவணையும் (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது. (அது அத்தவணைக்கு முந்தியும் வராது; பிந்தியும் வராது.)