caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Ra'd அத்தியாயம், வசனம் 33

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 96 · 13:33

أَفَمَنْ هُوَ قَآئِمٌ عَلَىٰ كُلِّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ قُلْ سَمُّوهُمْ أَمْ تُنَبِّـُٔونَهُۥ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلْأَرْضِ أَم بِظَٰهِرٍ مِّنَ ٱلْقَوْلِ بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ مَكْرُهُمْ وَصُدُّوا۟ عَنِ ٱلسَّبِيلِ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு ஆன்மாவும் அவை செய்தவற்றுக்கு ஏற்ப அவற்றை நிர்வகிப்பவனா (எதையும் செய்ய சக்தியற்ற கற்பனை தெய்வங்களுக்கு சமமாவான்)? அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர்! (நபியே!) கூறுவீராக! “(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் பெயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன் என்று பெயரிடமுடியுமா?) அல்லது பூமியில் அவன் அறியாததை அல்லது பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அதுவும் முடியாது.) மாறாக! நிராகரித்தவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சி அலங்கரிக்கப்பட்டது. (அவர்கள் நேரான) பாதையிலிருந்து தடுக்கப்பட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் எவரும் இல்லை.
Tamil Translation - Omar Sharifஆக, ஒவ்வோர் ஆன்மாவையும் - அது செய்ததற்கு ஏற்ப - அதை நிர்வகிப்பவன் எவ்வித சக்தியுமற்ற கற்பனை தெய்வங்களுக்கு சமமாவானா? இன்னும், அவர்கள் அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை செய்யப்பட்ட தெய்வங்)களை ஏற்படுத்தினர்! (நபியே!) கூறுவீராக! “(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் பெயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன் என்று உங்களால் பெயரிட முடியுமா?) அல்லது, பூமியில் அவன் அறியாததை; அல்லது, பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அதுவும் முடியாது.)” மாறாக! நிராகரித்தவர்களுக்கு - அவர்களுடைய சூழ்ச்சி - அலங்கரிக்கப்பட்டது. இன்னும், (அவர்கள் நேரான) பாதையிலிருந்து தடுக்கப்பட்டனர். மேலும், எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு, நேர்வழிகாட்டுபவர் எவரும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi33. ஒவ்வோர் ஆத்மாவும் செய்பவற்றை நன்கறிந்தவன் எதற்கும் சக்தியற்ற பொய் தெய்வங்களுக்கு சமமாவானா? அவர்களோ பொய்யான தெய்வங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர்! (இத்தகைய குற்றவாளிகளைத் தண்டிக்காது விட்டு விடுவானா? நபியே! நீர் அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் கூறுகின்ற தெய்வங்கள் மெய்யாகவே அவனுக்கு இணையானவையாக இருந்தால்,) அவற்றின் பெயர்களை கூறுங்கள் அல்லது பூமியில் (அவனுக்கு இணையான ஒன்றிருந்து அதை) அவன் அறியாது போய் அதைப் பற்றி அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது, உண்மையில்லாத) வெறும் வார்த்தைகள்தானா?'' என்று கேட்பீராக. (இவற்றில் ஒன்றுமில்லை!) மாறாக, இந்நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகளே அழகாகக் காண்பிக்கப்பட்டு விட்டன. (ஆதலால்தான் அவர்கள்) நேரான வழியிலிருந்தும் தடுக்கப்பட்டு விட்டனர். எவர்களை (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் ஒருவருமில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70