وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَأَمْلَيْتُ لِلَّذِينَ كَفَرُوا۟ ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்கள் திட்டமாக பரிகசிக்கப்பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு (தவணையை) நீட்டினேன். பிறகு, அவர்களைப் பிடித்தேன். என் தண்டனை எப்படி இருந்தது?
Tamil Translation - Omar Sharifமேலும், (நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்கள் திட்டவட்டமாக கேலி செய்யப்பட்டனர். ஆக, நிராகரித்தவர்களுக்கு (அவர்களது அவகாசத்தை) நீட்டிக்கொடுத்தேன். பிறகு, (என் தண்டனையால்) அவர்களைப் பிடித்தேன். ஆக, என் தண்டனை எப்படி இருந்தது?
Tamil Translation - Abdulhamid Baqawi32. (நபியே!) உமக்கு முன்னர் (வந்த நம்) தூதர் பலரும் (இவ்வாறே) நிச்சயமாகப் பரிகசிக்கப் பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களையும் (உடனே தண்டிக்காது) நாம் தவணையளித்து விட்டு வைத்தோம். ஆயினும், பின்னர் நாம் அவர்களை (தண்டனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். என் தண்டனை எப்படி இருந்தது? (என்பதைச் சிந்திப்பீராக!)