قُلْ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ قُلِ ٱللَّهُ قُلْ أَفَٱتَّخَذْتُم مِّن دُونِهِۦٓ أَوْلِيَآءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّا قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِى ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُ أَمْ جَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُوا۟ كَخَلْقِهِۦ فَتَشَٰبَهَ ٱلْخَلْقُ عَلَيْهِمْ قُلِ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَىْءٍ وَهُوَ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّٰرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) “வானங்கள் இன்னும் பூமியின் இறைவன் யார்?” என்று கூறுவீராக! (அவன்) “அல்லாஹ்”என்று கூறுவீராக! “அவனை அன்றி தங்களுக்கு நன்மை செய்வதற்கும் தீங்கு செய்வதற்கும் உரிமைபெறாத பாதுகாவலர்களை அல்லவா நீங்கள் (தெய்வங்களாக) எடுத்துக் கொண்டீர்கள்?” என்றும் கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும் ஒளியும் சமமாகுமா?” அல்லது அவர்கள் அல்லாஹ்விற்கு இணை(தெய்வங்)களை ஆக்கினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்து, அதனால் இவர்கள் மீது படைப்பது (யார் என்பது) குழப்பமடைந்ததா? என்று கூறுவீராக! கூறுவீராக! அல்லாஹ்தான் எல்லாவற்றின் படைப்பாளன் அவன்தான் ஒருவன், அடக்கி ஆளுபவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவன் யார்?” (நபியே!) கூறுவீராக: (அவன்) “அல்லாஹ்” என்று. (நபியே!) கூறுவீராக: “நீங்கள் அவனை அன்றி, (உங்களுக்கு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டீர்களா? அவர்கள் தங்களுக்கு தாமே நன்மை செய்வதற்கும் தீங்கு செய்வதற்கும் உரிமைபெற மாட்டார்கள். (நபியே!) கூறுவீராக: “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது, இருள்களும் ஒளியும் சமமாகுமா? அல்லது, அல்லாஹ்விற்கு இணைக(ளாக கற்பனை செய்யப்பட்ட தெய்வங்)ளை அவர்கள் ஏற்படுத்தினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்திருக்கின்றனவா? அதனால், படைத்தல் (யார் மூலம் நிகழ்கிறது என்பது) இவர்களுக்கு குழப்பமடைந்து விட்டதா?” (நபியே! இதற்கு பதிலாக நீர்) கூறுவீராக: “அல்லாஹ்தான் எல்லாவற்றின் படைப்பாளன் ஆவான். இன்னும், அவன் (நிகரற்ற) ஒருவன், (அனைவரையும்) அடக்கி ஆளுபவன் ஆவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi16. (நபியே! அவர்களை நோக்கி) ‘‘வானங்களையும், பூமியையும் படைத்து நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன!) நீரே (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவீராக. அவ்வாறிருக்க ‘‘அவனை அன்றி (பொய்யான தெய்வங்களை) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா? அவை தங்களுக்கே ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகளாய் இருக்கின்றன'' என்றும் கூறுவீராக. (இன்னும், அவர்களை நோக்கி) ‘‘குருடரும், பார்வை உடையவரும் சமமாவாரா? அல்லது இருளும் பிரகாசமும் சமமாகுமா?'' என்று கேட்பீராக. அல்லது ‘‘அவர்கள் (இறைவனுக்கு) இணையாக்கிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா?'' (என்றும் கேட்பீராக.) அவ்வாறாயின் (இந்த உலகைப்) படைத்தவன் (யாரென்பதில்) அவர்களுக்குள் சந்தேகமே ஏற்பட்டிருக்கலாம். (அவ்வாறும் இல்லையே! ஆகவே, அவர்களை நோக்கி) கூறுவீராக: (இவ்வுலகிலுள்ள) ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! (அவனுக்கு இணை துணையில்லை.) அவனே (உலகிலுள்ள அனைத்தையும்) அடக்கி ஆளுகிறான்.