وَلِلَّهِ يَسْجُدُ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَٰلُهُم بِٱلْغُدُوِّ وَٱلْـَٔاصَالِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் ஆசையாகவும், நிர்பந்தமாகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிகின்றனர்; காலை(களில்) இன்னும் மாலைகளில் அவர்களின் நிழல்களும் (அவனுக்கே சிரம் பணிகின்றன).
Tamil Translation - Omar Sharifவானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் ஆசையாகவும், நிர்ப்பந்தமாகவும் அல்லாஹ்விற்கே சிரம் பணிகிறார்கள்; இன்னும், காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் அவர்களின் நிழல்களும் அவனுக்கே சிரம் பணிகின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi15. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து வழிபட்டே தீரும். காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் (அவனுடைய கட்டளைக்கு வழிப்பட்டே முன் பின் செல்கின்றன).