لَهُۥ دَعْوَةُ ٱلْحَقِّ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَىْءٍ إِلَّا كَبَٰسِطِ كَفَّيْهِ إِلَى ٱلْمَآءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَٰلِغِهِۦ وَمَا دُعَآءُ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(பலன் தரும்) உண்மைப் பிரார்த்தனை அவனுக்கே உரியது. (மக்கள்) அவனையன்றி எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் அவர்களுக்கு எதையும் பதில் தரமாட்டார்கள். தண்ணீர் பக்கம் தன் இரு கைகளையும் அது (தானாகவே) தன் வாயை அடைவதற்காக விரிப்பவனைப் போன்றே தவிர (இவர்களின் செயல் வேறில்லை). அதுவோ (ஒரு போதும்) அதை அடையாது. (சிலைகளை அழைக்கும்) நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர வேறில்லை. (அவை அவர்களுக்கு எப்பலனையும் அளிக்காது.)
Tamil Translation - Omar Sharif(பலன் தரும்) உண்மைப் பிரார்த்தனை அவனுக்கே உரியது. இவர்கள் அவனையன்றி எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் இவர்களுக்கு எதையும் பதில் தரமாட்டார்கள். தண்ணீர் பக்கம் தன் இரு கைகளையும் அது (தானாகவே) தன் வாயை அடைவதற்காக விரிப்பவனைப் போன்றே தவிர (இவர்களின் செயல் இல்லை). அதுவோ (ஒரு போதும்) அதை அடையாது. (சிலைகளை வணங்குகின்ற) நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi14. (நாம் பிரார்த்தனை செய்து) உண்மையாக அழைக்கத் தகுதி உடையவன் அவனே. எவர்கள் அவனையன்றி (மற்ற பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து) அழைக்கிறார்களோ அவர்களுக்கு, அவை எதையும் கொடுத்து விடாது. (அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றை அழைப்பவர்களின் உதாரணம்:) தண்ணீர் (தானாகவே) தன் வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி, தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக் கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதை அவன் தன் கையால் அள்ளிக் குடிக்கும் வரை அவனுடைய) வாயை அது அடைந்துவிடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்பவர்கள் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது.