caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Ra'd அத்தியாயம், வசனம் 13

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 96 · 13:13

وَيُسَبِّحُ ٱلرَّعْدُ بِحَمْدِهِۦ وَٱلْمَلَٰٓئِكَةُ مِنْ خِيفَتِهِۦ وَيُرْسِلُ ٱلصَّوَٰعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَآءُ وَهُمْ يُجَٰدِلُونَ فِى ٱللَّهِ وَهُوَ شَدِيدُ ٱلْمِحَالِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇடியும், வானவர்களும் அவனுடைய பயத்தால் அவனைப் புகழ்ந்து துதிக்கின்றனர். அவர்களோ (-அம்மக்களோ) அல்லாஹ்வைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்க, அவனே அபாயங்களை அனுப்பி, அவற்றைக் கொண்டு அவன் நாடியவர்களை வேறறுக்கிறான். அவன் (ஆற்றலும்) பிடி(யும்) கடுமையானவன்.
Tamil Translation - Omar Sharifமேலும், இடியும் வானவர்களும் அவனுடைய பயத்தால் அவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். அவர்களோ (-அம்மக்களோ) அல்லாஹ்வைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவனே அபாயங்களை (-எரித்து சாம்பலாக்கிவிடும் இடி மின்னல்களை) அனுப்பி, அவற்றைக் கொண்டு அவன் நாடியவர்களை வேரறுக்கிறான். அவனோ (பாவிகளை) பிடிப்பதில் (-தண்டிப்பதால்) மிகக் கடுமையானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. இடிகளும் மற்ற வானவர்களும் அவனுக்குப் பயந்து அவனைத் துதி செய்து புகழ்கின்றனர். அவனே இடிகளை விழச்செய்து, அதைக்கொண்டு அவன் நாடியவர்களைத் தாக்குகிறான். (இவ்வாறு இருந்தும்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி (உங்களிடம்) தர்க்கிக்கின்றனர். அவனோ (அவர்களைத் தண்டிக்கக் கருதினால் அவர்கள்) நழுவாது மிக்க பலமாகப் பிடித்துக் கொள்பவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70