قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِۦٓ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِۦ قَبْلَ أَن يَأْتِيَكُمَا ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِى رَبِّىٓ إِنِّى تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَهُم بِٱلْـَٔاخِرَةِ هُمْ كَٰفِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நீங்கள் (இருவரும்) உணவளிக்கப்படுகிற உணவு உங்களிடம் வராது, அது உங்களிடம் வருவதற்கு முன்னர் அதன் விளக்கத்தை நான் உங்கள் இருவருக்கும் அறிவித்தே தவிர. இது என் இறைவன் எனக்கு கற்பித்ததிலிருந்து (நான் கூறுவதாகும்). அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டு விட்டேன். அவர்கள் மறுமையையும் நிராகரிக்கின்றார்கள்.
Tamil Translation - Omar Sharif(யூஸுஃப்) கூறினார்: “நீங்கள் (இருவரும்) உணவளிக்கப்படுகிற உணவு உங்கள் இருவரிடம் வராது, அது உங்கள் இருவரிடம் வருவதற்கு முன்னர் அதன் விளக்கத்தை நான் உங்கள் இருவருக்கும் அறிவித்தே தவிர. இது, என் இறைவன் எனக்கு கற்பித்ததிலிருந்து (நான் கூறுவதாகும்). அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன். இன்னும், அவர்களோ மறுமையை நிராகரிக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi37. (அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் புசிக்கக்கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமையை நிராகரிக்கின்ற மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்.