caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:36

وَدَخَلَ مَعَهُ ٱلسِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَآ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَعْصِرُ خَمْرًا وَقَالَ ٱلْـَٔاخَرُ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَحْمِلُ فَوْقَ رَأْسِى خُبْزًا تَأْكُلُ ٱلطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِۦٓ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரு வாலிபர்களும் அவருடன் சிறையில் நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவன் “நிச்சயமாக நான் மதுவை பிழிவதாக என்னை கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன் “என் தலை மேல் நான் ரொட்டியைச் சுமக்க, அதிலிருந்து பறவைகள் புசிப்பதாக நிச்சயமாக நான் என்னை கனவு கண்டேன்” என்று கூறினான். (பிறகு இருவரும்) “இதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
Tamil Translation - Omar Sharif(ஆகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில்) இரு வாலிபர்கள் அவருடன் சிறையில் (தங்கள் குற்றங்களுக்காக) நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவன், “நிச்சயமாக நான் மதுவை பிழிவதாக என்னை கனவில் பார்த்தேன்” என்று கூறினான். இன்னும், மற்றவனோ, “என் தலை மேல் நான் ரொட்டியைச் சுமக்கும் நிலையில், அதிலிருந்து பறவைகள் புசிப்பதாக நிச்சயமாக நான் என்னை கனவில் பார்த்தேன்” என்று கூறினான். “இதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” (என்று அவ்விருவரும் கூறினார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi36. (அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) ‘‘நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறினான். மற்றவன் ‘‘நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீர் எங்களுக்கு அறிவிப்பீராக!'' (என்று கூறினான்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70