وَٱتَّبَعْتُ مِلَّةَ ءَابَآءِىٓ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَآ أَن نُّشْرِكَ بِٱللَّهِ مِن شَىْءٍ ذَٰلِكَ مِن فَضْلِ ٱللَّهِ عَلَيْنَا وَعَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன் மூதாதைகளாகிய இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் உடைய மார்க்கத்தை பின்பற்றினேன். அல்லாஹ்விற்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்குத் தகுமானதல்ல. இது எங்கள் மீதும் (மற்ற) மக்கள் மீதும் அல்லாஹ்வின் அருளிலிருந்து உள்ளதாகும். எனினும், மக்களில் அதிகமானவர்கள், (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நான் என் மூதாதைகளாகிய இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் உடைய மார்க்கத்தை பின்பற்றினேன். நாங்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைப்பது எங்களுக்குத் தகுமானதல்ல. இ(ந்த ஓர் இறை நம்பிக்கையை பின்பற்றுவ)து எங்களுக்கும் (உலக) மக்களுக்கும் கிடைத்த அல்லாஹ்வின் அருளாகும். எனினும், மக்களில் அதிகமானவர்கள், (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. என் மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை.