ثُمَّ بَدَا لَهُم مِّنۢ بَعْدِ مَا رَأَوُا۟ ٱلْـَٔايَٰتِ لَيَسْجُنُنَّهُۥ حَتَّىٰ حِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, (யூஸுஃப் நிரபராதி என்பதின்) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும் அவர்கள் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நிச்சயமாக அவரை சிறையில் அடைக்கவேண்டும் என அவர்களுக்குத் தோன்றியது.
Tamil Translation - Omar Sharifபிறகு, (யூஸுஃப் நிரபராதி என்பதின்) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும் (இந்த செய்தி நகரத்தில் பரவி விடக்கூடாது என்பதற்காக) அவர்கள் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நிச்சயமாக அவரை சிறையில் அடைக்கவேண்டும் என (எண்ணம்) அவர்களுக்குத் தோன்றியது.
Tamil Translation - Abdulhamid Baqawi35. (யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.)