caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:21

وَقَالَ ٱلَّذِى ٱشْتَرَىٰهُ مِن مِّصْرَ لِٱمْرَأَتِهِۦٓ أَكْرِمِى مَثْوَىٰهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوْ نَتَّخِذَهُۥ وَلَدًا وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ وَلِنُعَلِّمَهُۥ مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ وَٱللَّهُ غَالِبٌ عَلَىٰٓ أَمْرِهِۦ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர், “நீ இவரின் தங்குமிடத்தை கண்ணியப்படுத்து; (கண்ணியமாக தங்கவை) அவர் நமக்கு பலனளிக்கலாம்; அல்லது அவரை நாம் (நமக்கு) ஒரு பிள்ளையாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று தன் மனைவிக்கு கூறினார். இவ்வாறு தான் பூமியில் யூஸுஃபுக்கு ஆதிக்கமளித்தோம். (கனவு பற்றிய) செய்திகளின் விளக்கத் திலிருந்து (நாம் நாடியதை) அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (அவருக்கு ஆதிக்கமளித்தோம்). அல்லாஹ் தன் காரியத்தில் மிகைத்தவன். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (பயனக்கூட்டம், யூஸுபை எகிப்தியர்களிடம் விற்றுவிட்டார்கள்.) எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர் தனது மனைவியிடம் கூறினார்: “நீ இவரை கண்ணியமான இடத்தில் தங்கவை! அவர் நமக்கு பலனளிக்கலாம்; அல்லது, அவரை நாம் (நமக்கு) ஒரு பிள்ளையாக ஆக்கிக் கொள்ளலாம்.” இன்னும், இவ்வாறுதான் பூமியில் யூஸுஃபுக்கு நாம் ஆதிக்கமளித்தோம். (கனவு பற்றிய) செய்திகளின் விளக்கத்திலிருந்து (நாம் நாடியதை) அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (எகிப்தின் அரசாங்கத்தை நிர்வகிப்பதற்காகவும் அவருக்கு ஆதிக்கமளித்தோம்). அல்லாஹ், தன் காரியத்தில் மிகைத்தவன். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. (அவரை வாங்கியவர்கள், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்று விட்டனர்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி ‘‘நீ இவரை கண்ணியமாக வைத்துக்கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம் (வளர்ப்பு) மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கியானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ், தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவன் ஆவான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70