وَشَرَوْهُ بِثَمَنٍۭ بَخْسٍ دَرَٰهِمَ مَعْدُودَةٍ وَكَانُوا۟ فِيهِ مِنَ ٱلزَّٰهِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(திரும்பி வந்த யூஸுஃபுடைய சகோதரர்கள்) எண்ணப்பட்ட (சில) திர்ஹம்களுக்கு பகரமாக, குறைவான ஒரு தொகைக்கு அவரை (பயணக் கூட்டத்தாரிடம்) விற்றார்கள். (அவர்கள்) அவர் விஷயத்தில் ஆசையற்றவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (யூஸுஃபுடைய சகோதரர்கள் மீண்டும் அந்த கிணற்றருகே வந்தனர்.) எண்ணப்பட்ட (சில சொற்ப) திர்ஹம்களுக்கு பகரமாக, குறைவான ஒரு தொகைக்கு அவரை (அடிமையாக அந்த பயணக் கூட்டத்திடம்) விற்றார்கள். இன்னும், அவர் விஷயத்தில் அவர்கள் ஆசையற்றவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. (இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து ‘‘இவன் தப்பி ஓடி வந்து விட்ட எங்கள் அடிமை'' எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்தவர்களாகவே இருந்தனர்.