caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:7

وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُۥ عَلَى ٱلْمَآءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَلَئِن قُلْتَ إِنَّكُم مَّبْعُوثُونَ مِنۢ بَعْدِ ٱلْمَوْتِ لَيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தவன். அவனுடைய ‘அர்ஷு’ நீரின் மீதிருந்தது. உங்களில் யார் செயலால் மிக அழகியவர் என்று அவன் உங்களை சோதிப்பதற்காக (உங்களைப் படைத்தான்). “இறப்பிற்கு பின்னர் நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்” என்று (நபியே) நீர் கூறினால், “இது பகிரங்கமான சூனியமே தவிர (வேறு) இல்லை” என்று நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். இன்னும், அவனுடைய ‘அர்ஷ்’ நீரின் மீதிருந்தது. உங்களில் யார் செயலால் மிக அழகியவர் என்று அவன் உங்களை சோதிப்பதற்காக (உங்களைப் படைத்தான்). (நபியே) இன்னும், “இறப்பிற்கு பின்னர் நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், “இது தெளிவான சூனியமே தவிர (எதுவும் உண்மை) இல்லை” என்று நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய ‘அர்ஷு' நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீர் மனிதர்களை நோக்கி) ‘‘நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் ‘‘இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70