caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:8

وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ ٱلْعَذَابَ إِلَىٰٓ أُمَّةٍ مَّعْدُودَةٍ لَّيَقُولُنَّ مَا يَحْبِسُهُۥٓ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களை விட்டு வேதனையை எண்ணப்பட்ட ஒரு காலம் வரை நாம் பிற்படுத்தினால் “அதை எது தடுக்கின்றது?” என நிச்சயம் அவர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்களிடம் அது வரும் நாளில், (அது) அவர்களை விட்டு அறவே திருப்பப்படாது. அவர்கள் எதை பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களை சூழும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களை விட்டும் தண்டனையை எண்ணப்பட்ட ஒரு காலம் வரை நாம் பிற்படுத்தினால், “அதை எது தடுக்கிறது?” என நிச்சயம் அவர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்களிடம் அ(ந்த தண்டனையான)து வரும் நாளில், (அது) அவர்களை விட்டும் அறவே திருப்பப்படாது. இன்னும் அவர்கள் எதை கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களை சூழ்ந்துவிடும்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (நிராகரிப்பின் காரணமாக) அவர்களுக்கு (வரவேண்டிய) வேதனையை ஒரு சொற்ப காலம் நாம் பிற்படுத்தியபோதிலும் ‘‘அதைத் தடுத்துக்கொண்டது எது?'' எனப் பரிகாசமாகக் கேட்கிறார்கள். அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அதைத் தடுத்துவிட முடியாது என்பதையும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70