وَمَا مِن دَآبَّةٍ فِى ٱلْأَرْضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِى كِتَٰبٍ مُّبِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎந்த ஓர் உயிரினமும் பூமியில் இல்லை அதற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருந்தே தவிர. அவற்றின் தங்குமிடத்தையும், (அவை இறந்த பிறகு) அவற்றின் அடங்குமிடத்தையும் அவன் அறிகின்றான். எல்லாம் தெளிவான பதிவேட்டில் (பதிவாகி) உள்ளன.
Tamil Translation - Omar Sharifஎந்த ஓர் உயிரினமும் பூமியில் இல்லை அதற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருந்தே தவிர. (உலகத்தில்) அவை தங்குமிடத்தையும், (அவை இறந்த பிறகு) அவை அடக்கம் செய்யப்படும் இடத்தையும் அவன் நன்கறிவான். எல்லாம் தெளிவான பதிவேட்டில் (முன்பே பதிவுசெய்யப்பட்டு) உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi6. உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத உயிரினம் ஒன்றுமே பூமியில் இல்லை. அவை (உயிருடன்) வாழுகின்ற இடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன.