caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:5

هُوَ ٱلَّذِى جَعَلَ ٱلشَّمْسَ ضِيَآءً وَٱلْقَمَرَ نُورًا وَقَدَّرَهُۥ مَنَازِلَ لِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ مَا خَلَقَ ٱللَّهُ ذَٰلِكَ إِلَّا بِٱلْحَقِّ يُفَصِّلُ ٱلْـَٔايَٰتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனே சூரியனை ஒளியாகவும், சந்திரனை வெளிச்சமாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காக அதை (-சந்திரனை பல) தங்குமிடங்களில் நிர்ணயித்தான். உண்மையான (காரணத்)திற்கே தவிர இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. அறி(ந்து கொள்)கின்ற சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை (இவ்வாறு) விவரிக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் சூரியனை ஒளியாகவும், சந்திரனை வெளிச்சமாகவும் ஆக்கினான். இன்னும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காக அதை (-சந்திரனை பல) தங்குமிடங்களில் நிர்ணயித்தான். உண்மையான காரணத்திற்கே தவிர இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. (இவற்றின் மூலம் அல்லாஹ்வின் வல்லமையை) அறி(ய முயற்சிக்)கின்ற சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை அவன் (இவ்வாறு) விவரிக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்), சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவற்றுக்கு (மாறிமாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக(த் தன் ஆற்றலுக்குரிய) சான்றுகளை இவ்வாறு விவரிக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70