caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:6

إِنَّ فِى ٱخْتِلَٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَمَا خَلَقَ ٱللَّهُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يَتَّقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இரவு பகல் மாறுவதிலும், வானங்கள் இன்னும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் அல்லாஹ்வை அஞ்சுகின்ற மக்களுக்கு உறுதியாக (பல) அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக இரவு பகல் (ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக) மாறி மாறி வருவதிலும், வானங்கள்; இன்னும், பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் அல்லாஹ்வை அஞ்சுகின்ற மக்களுக்கு உறுதியாக (பல) அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi6. இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானங்கள் இன்னும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் இறையச்சமுடைய மக்களுக்கு (நல்லுணர்வூட்டும்) பல சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70