إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًا وَعْدَ ٱللَّهِ حَقًّا إِنَّهُۥ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ لِيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ بِٱلْقِسْطِ وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனிடமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையே! நிச்சயமாக அவன் படைப்பை ஆரம்பிக்கிறான். பிறகு அதை மீட்கிறான். (ஏனெனில்) நம்பிக்கைகொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக அவன் (நற்)கூலி கொடுப்பதற்காக. நிராகரித்தவர்களோ அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு முற்றிலும் கொதித்த (சீல் சலம் போன்ற)வற்றிலிருந்து குடிபானமும் மிகத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
Tamil Translation - Omar Sharifஅவனிடமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையே! நிச்சயமாக அவன் படைப்பை ஆரம்பிக்கிறான். பிறகு, அதை (அழிக்கிறான். பிறகு அதை) மீண்டும் உருவாக்குகிறான், (ஏனெனில்,) நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக அவன் (நற்)கூலி கொடுப்பதற்காக. இன்னும், எவர்கள் நிராகரித்தார்களோ, - அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, முற்றிலும் சூடேறி கொதிக்கின்ற (சீழ் சலம் போன்ற) குடிபானமும் மிகத் துன்புறுத்தும் தண்டனையும் அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi4. இறந்த பின்னர் நீங்கள் அனைவரும் அவனிடமே செல்ல வேண்டியதிருக்கிறது. அல்லாஹ்வுடைய இவ்வாக்குறுதி உண்மையானதே! நிச்சயமாக அவன்தான் படைப்புகளை முதல் தடவையும் உற்பத்தி செய்கிறான். (இறந்த பின் மறுமுறையும்) அவர்களை உயிர்ப்பித்து, அவர்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக (நற்)கூலி கொடுக்கிறான். (இதை) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையாக கொதித்த நீர்தான் (மறுமையில்) குடிக்கக் கிடைக்கும். (இதை) நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு.