caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 35

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:35

قُلْ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَهْدِىٓ إِلَى ٱلْحَقِّ قُلِ ٱللَّهُ يَهْدِى لِلْحَقِّ أَفَمَن يَهْدِىٓ إِلَى ٱلْحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهِدِّىٓ إِلَّآ أَن يُهْدَىٰ فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவர் உங்கள் இணை தெய்வங்களில் யாரும் உண்டா?” என்று கூறுவீராக! “அல்லாஹ்தான் சத்தியத்திற்கு நேர்வழி காட்டுகிறான். சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவன் பின்பற்றப்படுவதற்கு மிகத் தகுதியானவனா? அல்லது, தான் நேர்வழி காட்டப்பட்டால் தவிர நேர்வழியடையாதவ(ன் பின்பற்றப்படுவதற்கு தகுதியானவ)னா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்” என்று (நபியே) கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(நபியே) கூறுவீராக: “சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவர் (யாரும்) உங்கள் தெய்வங்களில் உண்டா?” (நபியே) கூறுவீராக: “அல்லாஹ்தான் சத்தியத்திற்கு நேர்வழி காட்டுகிறான். ஆக, சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவன் பின்பற்றப்படுவதற்கு மிகத் தகுதியானவனா? அல்லது, தான் நேர்வழி காட்டப்பட்டால் தவிர நேர்வழி அடையாதவ(ன் பின்பற்ற தகுதியானவ)னா? ஆக, உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்”
Tamil Translation - Abdulhamid Baqawi35. (‘‘சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்றும் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்'' (என்று கூறி) ‘‘நேரான வழியில் செலுத்தக்கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்'' என்றும் கேட்பீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70