وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا إِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தேகத்தையே தவிர (வேறு எதையும்) பின்பற்றவில்லை. நிச்சயமாக சந்தேகம் உண்மையை விட்டும் ஒரு சிறிதும் பலன்தராது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தேகத்தையே தவிர (வேறு எதையும்) பின்பற்றுவதில்லை. நிச்சயமாக சந்தேகம் உண்மையை விட்டும் ஒரு சிறிதும் பலன்தராது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீண் சந்தேகத்தையே தவிர வேறொன்றையும் பின்பற்றுவது இல்லை. நிச்சயமாக வீண் சந்தேகம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.