caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 34

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:34

قُلْ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ قُلِ ٱللَّهُ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ فَأَنَّىٰ تُؤْفَكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“படைப்புகளை ஆரம்பித்து, (அவை இறந்த) பிறகு, அவற்றை மீட்பவன் உங்கள் இணை தெய்வங்களில் (யாரும்) உண்டா?” என்று (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்தான் படைப்புகளை ஆரம்பிக்கிறான். பிறகு அவற்றை (உயிர்க் கொடுத்து) மீட்கிறான்.” (நம்பிக்கை கொள்வதிலிருந்து) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?” என்று (நபியே) கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “படைப்புகளை முதலாவதாக உருவாக்கி, (அவை இறந்த) பிறகு, அவற்றை மீண்டும் உருவாக்குபவன் (யாரும்) உங்கள் தெய்வங்களில் உண்டா?” (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்தான் படைப்புகளை முதலாவதாக உருவாக்குகிறான். பிறகு, (அவை இறந்த பின்னர்) அவற்றை மீண்டும் (மறுமையில்) உருவாக்குவான்.” ஆக, (இத்தகைய இறைவனை வணங்குவதிலிருந்து சிலைகளை வணங்குவதன் பக்கம்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?
Tamil Translation - Abdulhamid Baqawi34. (அவர்களை நோக்கி) ‘‘புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரணித்த பின்) அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியவனும் அல்லாஹ்தான்'' (என்று கூறி ‘‘இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கிறீர்கள்?'' என்றும் கேட்பீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70