وَٱلَّذِينَ كَسَبُوا۟ ٱلسَّيِّـَٔاتِ جَزَآءُ سَيِّئَةٍۭ بِمِثْلِهَا وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ مَّا لَهُم مِّنَ ٱللَّهِ مِنْ عَاصِمٍ كَأَنَّمَآ أُغْشِيَتْ وُجُوهُهُمْ قِطَعًا مِّنَ ٱلَّيْلِ مُظْلِمًا أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَٰلِدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதீமைகளை செய்தவர்கள் தீமையின் கூலி(யாக) அது போன்ற(தீய)தைக் கொண்டுதான் (கொடுக்கப்படுவார்கள்)! அவர்களை இழிவு சூழும். அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவர் ஒருவரும் அவர்களுக்கு இல்லை. இருண்ட இரவின் ஒரு பாகத்தால் அவர்களுடைய முகங்கள் சூழப்பட்டதைப் போன்று இருக்கும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், தீமைகளை செய்தவர்கள் (அவர்களின்) தீமைக்கு கூலி(யாக) அது போன்ற (தீய)தைக் கொண்டுதான் (கொடுக்கப்படுவார்கள்)! இன்னும், அவர்களை இழிவு சூழ்ந்துவிடும். அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவர் எவரும் அவர்களுக்கு இல்லை. இருண்ட இரவின் ஒரு பல பாகங்களால் அவர்களுடைய முகங்கள் போர்த்தப்பட்டதைப் போன்று (கடும் கருப்பாக) இருக்கும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப் போன்ற தீமையே! அவர்களை இழிவு வந்தடையும். அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவருமில்லை. இருண்ட இரவின் ஒரு பாகம் வந்து சூழ்ந்து கொண்டதைப்போல் அவர்களுடைய முகங்கள் (கருப்பாகக்) காணப்படும். அவர்கள் நரகவாசிகள்தான். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.