caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 28

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:28

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا۟ مَكَانَكُمْ أَنتُمْ وَشُرَكَآؤُكُمْ فَزَيَّلْنَا بَيْنَهُمْ وَقَالَ شُرَكَآؤُهُم مَّا كُنتُمْ إِيَّانَا تَعْبُدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில்... பிறகு, இணை வைத்தவர்களை நோக்கி “நீங்களும் உங்கள் இணை(தெய்வங்)களும் உங்கள் இடத்திலேயே (தாமதியுங்கள்)” என்று கூறுவோம். அவர்களுக்கிடையில் (தொடர்பை) நீக்கி விடுவோம். “நீங்கள் எங்களை வணங்கி கொண்டிருக்கவில்லை” என்று அவர்களுடைய இணை(தெய்வங்)கள் கூறும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளை நினைவு கூர்வீராக! பிறகு, இணை வைத்தவர்களை நோக்கி, “நீங்களும் (நீங்கள் இணை வைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே (தாமதியுங்கள்)” என்று கூறுவோம். ஆக, அவர்களுக்கிடையில் (இருந்த தொடர்பை) நீக்கி விடுவோம். (அப்போது) “நீங்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை” என்று அவர்க(ள் இணை வைத்து வணங்கிய அவர்க)ளுடைய தெய்வங்கள் கூறும்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. (விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி ‘‘நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்'' என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக அவர்கள் வணங்கி வந்தவை) அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களை வணங்கவே இல்லை'' என்றும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70