هُوَ ٱلَّذِى يُسَيِّرُكُمْ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ حَتَّىٰٓ إِذَا كُنتُمْ فِى ٱلْفُلْكِ وَجَرَيْنَ بِهِم بِرِيحٍ طَيِّبَةٍ وَفَرِحُوا۟ بِهَا جَآءَتْهَا رِيحٌ عَاصِفٌ وَجَآءَهُمُ ٱلْمَوْجُ مِن كُلِّ مَكَانٍ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ لَئِنْ أَنجَيْتَنَا مِنْ هَٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிலத்திலும் நீரிலும் உங்களை அவன்தான் பயணிக்க வைக்கிறான். இறுதியாக நீங்கள் கப்பல்களில் இருக்க, நல்ல காற்றால் (அவை) அவர்களை சுமந்து பயணித்தன, அதன்மூலம் அவர்கள் மகிழ்ந்தனர். (இந்நிலையில்) அவற்றுக்கு புயல் காற்று வந்தது. எல்லா இடத்திலிருந்தும் அவர்களுக்கு அலைகள் (சூழ்ந்து) வர, “நிச்சயமாக தாம் அழிக்கப்பட்டோம்” என்று அவர்கள் எண்ணியபோது, “(அல்லாஹ்வே!) இதிலிருந்து நீ எங்களைப் பாதுகாத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களில் இருப்போம்” என்று அவனுக்கு வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக அல்லாஹ்வை அவர்கள் அழைக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் உங்களை நிலத்திலும் நீரிலும் பயணிக்க வைக்கிறான். இறுதியாக, நீங்கள் கப்பல்களில் இருக்கும் நிலையில், நல்ல காற்றால் (அந்த கப்பல்கள்) அ(வற்றில் பயணிப்ப)வர்களை சுமந்து செல்கின்றன. இன்னும், அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். (இந்நிலையில்) அவற்றைப் புயல் காற்று வந்தடைந்தன. இன்னும், எல்லா இடத்திலிருந்தும் அவர்களை அலைகள் சூழ்ந்து வந்தன. இன்னும், “நிச்சயமாக தாம் அழிக்கப்பட்டோம்” என்று அவர்கள் எண்ணியபோது, “(அல்லாஹ்வே!) இதிலிருந்து நீ எங்களைப் பாதுகாத்(து கரை சேர்த்)தால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களில் இருப்போம்” என்று அவர்கள் அல்லாஹ்வை - அவனுக்கு (மட்டும்) வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக - அழைக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி ‘‘நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு ஒரு வழியுமில்லை)'' என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி ‘‘எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்'' என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள்.