فَلَمَّآ أَنجَىٰهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَىٰٓ أَنفُسِكُم مَّتَٰعَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் அவர்களை பாதுகாத்தபோது அவர்கள் பூமியில் அப்போதே நியாயமின்றி வரம்புமீறுகின்றனர். மனிதர்களே! உங்கள் வரம்புமீறுதல் எல்லாம் உங்களுக்கே (கேடானது). (இது) இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமாகும். பிறகு நம் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் உங்களுக்கு அறிவிப்போம்.
Tamil Translation - Omar Sharifஆக, அவன் அவர்களை பாதுகாத்தபோது அவர்கள் பூமியில் உடனே நியாயமின்றி, (பாவம் செய்வதிலும் குழப்பம் செய்வதிலும்) எல்லை மீறுகிறார்கள். மனிதர்களே! உங்கள் எல்லை மீறுதல் எல்லாம் உங்களுக்கே கேடானதாகும். இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமாகும். பிறகு, நம் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, (அப்போது) நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் உங்களுக்கு அறிவிப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. அவன் அவர்களை பாதுகாத்துக் கொண்டாலோ அவர்கள் (கரை சேர்ந்த) அச்சமயமே நியாயமின்றி பூமியில் அநியாயம் செய்யத் தலைப்படுகின்றனர். மனிதர்களே! உங்கள் அடாத செயல்கள் உங்களுக்கே கேடாக முடியும். (அதனால்) இவ்வுலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவிக்கலாம். பின்னரோ நம்மிடம்தான் நீங்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை எவை என்பதை அச்சமயம் நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.