وَلَوْ أَنَّهُمْ رَضُوا۟ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ سَيُؤْتِينَا ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَرَسُولُهُۥٓ إِنَّآ إِلَى ٱللَّهِ رَٰغِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததை நிச்சயமாக அவர்கள் திருப்தியடைந்து, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அல்லாஹ் தனது அருளிலிருந்து(ம்) இன்னும் அவனுடைய தூதர் (தன் தர்மத்திலிருந்தும்) எங்களுக்குக் கொடுப்பார்கள்; நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் பக்கம்தான் ஆசையுள்ளவர்கள்” என்றும் அவர்கள் கூற வேண்டுமே!
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததை நிச்சயமாக அவர்கள் திருப்தியடைந்திருக்க வேண்டுமே! இன்னும், “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ் தனது அருளிலிருந்து(ம்) இன்னும், அவனுடைய தூதர் (தன் தர்மத்திலிருந்தும்) எங்களுக்குக் கொடுப்பார்கள். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் பக்கம்தான் ஆசையுள்ளவர்கள்” என்று அவர்கள் கூறி இருக்க வேண்டுமே!
Tamil Translation - Abdulhamid Baqawi59. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி திருப்தியடைந்து, ‘‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இன்னும் நமக்கு அருள்புரியக் கூடும்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்'' என்று அவர்கள் கூற வேண்டாமா?