caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 48

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:48

لَقَدِ ٱبْتَغَوُا۟ ٱلْفِتْنَةَ مِن قَبْلُ وَقَلَّبُوا۟ لَكَ ٱلْأُمُورَ حَتَّىٰ جَآءَ ٱلْحَقُّ وَظَهَرَ أَمْرُ ٱللَّهِ وَهُمْ كَٰرِهُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள் இதற்கு) முன்னர் குழப்பத்தைத் தேடியுள்ளனர். உமக்கு காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டி(க் காண்பித்த)னர். இறுதியாக (வெற்றி எனும்) சத்தியம் வந்தது, அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தும் அல்லாஹ்வின் கட்டளை (மார்க்கம்) வென்றது.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக (அவர்கள் இதற்கு) முன்னர் குழப்பத்தைத் தேடியுள்ளனர். இன்னும், காரியங்களை உமக்கு (தலைகீழாய்)ப் புரட்டி(க் காண்பித்த)னர். இறுதியாக (வெற்றி எனும்) சத்தியம் வந்தது. இன்னும், அவர்கள் வெறுப்பவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ்வின் கட்டளை(யாகிய அவனது மார்க்கம்) வென்றது.
Tamil Translation - Abdulhamid Baqawi48. (உங்களுக்கு) வெற்றி கிடைக்கும் வரை இதற்கு முன்னரும் அவர்கள் விஷமம் செய்யக் கருதி உங்கள் காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டிக்கொண்டே இருந்தனர். (உங்கள் வெற்றியை) அவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்வுடைய கட்டளையே வெற்றியடைந்தது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70