وَمِنْهُم مَّن يَقُولُ ٱئْذَن لِّى وَلَا تَفْتِنِّىٓ أَلَا فِى ٱلْفِتْنَةِ سَقَطُوا۟ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌۢ بِٱلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) “எனக்கு அனுமதி தருவீராக, என்னைச் சோதிக்காதீர்” என்று கூறுபவரும் அவர்களில் உண்டு. அறிந்து கொள்ளுங்கள் அவர்கள் சோதனையில் விழுந்தனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களை சூழ்ந்தே உள்ளது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) “எனக்கு அனுமதி தருவீராக, என்னைச் சோதிக்காதீர்” என்று கூறுபவரும் அவர்களில் உண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சோதனையில்தான் விழுந்தனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களை சூழ்ந்தே உள்ளது.
Tamil Translation - Abdulhamid Baqawi49. (நபியே! ‘‘போருக்கு அழைத்து) நீர் என்னைச் சோதனைக் குள்ளாக்காமலே (வீட்டில் நான் தங்கியிருக்க) எனக்கு அனுமதி தருவீராக'' என்று கோருபவர்களும் அவர்களில் சிலர் இருக்கின்றனர். (எனினும் இவ்வாறு கோரும்) அவர்கள் (கஷ்டமான பல) சோதனைகளிலேயே மூழ்கிக் கிடக்கவில்லையா? நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது.