caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 47

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:47

لَوْ خَرَجُوا۟ فِيكُم مَّا زَادُوكُمْ إِلَّا خَبَالًا وَلَأَوْضَعُوا۟ خِلَٰلَكُمْ يَبْغُونَكُمُ ٱلْفِتْنَةَ وَفِيكُمْ سَمَّٰعُونَ لَهُمْ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் உங்களுடன் வெளியேறி (வந்து) இருந்தால் தீமையைத் தவிர (வேறு எதையும்) உங்களுக்கு அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்; உங்களுக்கு குழப்பத்தைத் தேடி உங்களுக்கிடையில் விரைந்திருப்பார்கள். அவர்களுக்காக (உளவு பார்க்கும்) ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் உங்களுடன் (போருக்கு) வெளியேறி (வந்து) இருந்தால் தீமையைத் தவிர உங்களுக்கு அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்; இன்னும், உங்களுக்கு குழப்பத்தைத் தேடி உங்களுக்கிடையில் விரைந்(து விஷமத்தனமான வேலை செய்)திருப்பார்கள். இன்னும், அவர்களுக்காக (உளவு பார்க்கும்) ஒற்றர்களும் உங்களுடன் இருக்கிறார்கள். இன்னும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டு பண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70