إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ ٱللَّهُ إِذْ أَخْرَجَهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ ثَانِىَ ٱثْنَيْنِ إِذْ هُمَا فِى ٱلْغَارِ إِذْ يَقُولُ لِصَٰحِبِهِۦ لَا تَحْزَنْ إِنَّ ٱللَّهَ مَعَنَا فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَيْهِ وَأَيَّدَهُۥ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلسُّفْلَىٰ وَكَلِمَةُ ٱللَّهِ هِىَ ٱلْعُلْيَا وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அவருக்கு உதவவில்லையெனில் (அவருக்கு நஷ்டம் இல்லை). இருவரில் ஒருவராக அவர் இருக்க நிராகரித்தவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றியபோது, அவ்விருவரும் குகையில் இருந்தபோது, தன்தோழருக்கு “கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்”என்று கூறியபோது அல்லாஹ் அவருக்கு உதவி செய்துவிட்டான். அல்லாஹ் அவர் மீது தன் அமைதியை இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரித்தவர்களின் வார்த்தையை (-மார்க்கத்தை, ஆற்றலை) மிகத் தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின் வார்த்தைதான் (அவனது மார்க்கம், வலிமை) மிக உயர்வானது. அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
Tamil Translation - Omar Sharifநீங்கள் அவருக்கு உதவவில்லையெனில் (அவருக்கு நஷ்டம் இல்லை). இருவரில் ஒருவராக அவர் இருக்கும் நிலையில் நிராகரித்தவர்கள் அவரை (ஊரை விட்டு) வெளியேற்றியபோது, அவ்விருவரும் குகையில் இருந்தபோது, தன் தோழரை நோக்கி, “நீ கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று கூறியபோது அல்லாஹ் அவருக்கு உதவி செய்துவிட்டான். ஆக, அல்லாஹ் அவர் மீது தன் அமைதியை இறக்கினான். இன்னும், நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். நிராகரித்தவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை, ஆற்றலை) மிகத் தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின் வார்த்தைதான் (அவனது மார்க்கம், வலிமை) மிக உயர்வானது. அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. (நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கு ஏதும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கிறான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி ‘‘நீர் கவலைப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன் புறத்திலிருந்து மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங்களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்)தான் மிக உயர்வானது. இன்னும், அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.