caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 39

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:39

إِلَّا تَنفِرُوا۟ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْـًٔا وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(போருக்கு) நீங்கள் புறப்படாவிட்டால், துன்புறுத்தக்கூடிய வேதனையால் உங்களை வேதனை செய்வான்; உங்களை அன்றி (வேறு) ஒரு சமுதாயத்தை மாற்றி விடுவான். நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.
Tamil Translation - Omar Sharif(போருக்கு) நீங்கள் புறப்படாவிட்டால், துன்புறுத்தக்கூடிய தண்டனையால் அவன் உங்களை தண்டிப்பான்; இன்னும், உங்களை அன்றி (வேறு) ஒரு சமுதாயத்தை (தனது தீனுக்காக) மாற்றி விடுவான். நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi39. (உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லாவிட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (மேலும், உங்களைப் போக்கி) உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது. ஏனென்றால், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70