caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 72

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:72

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَوا۟ وَّنَصَرُوٓا۟ أُو۟لَٰٓئِكَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَمْ يُهَاجِرُوا۟ مَا لَكُم مِّن وَلَٰيَتِهِم مِّن شَىْءٍ حَتَّىٰ يُهَاجِرُوا۟ وَإِنِ ٱسْتَنصَرُوكُمْ فِى ٱلدِّينِ فَعَلَيْكُمُ ٱلنَّصْرُ إِلَّا عَلَىٰ قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَٰقٌ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தங்கள் ஊரை விட்டு வெளியேறி) ஹிஜ்ரா சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருள்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள் இன்னும் (இவர்களை) அரவணைத்து, உதவியவர்கள் இவர்கள்: இவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவர். எவர்கள் நம்பிக்கை கொண்டு ஆனால் ஹிஜ்ரா செல்லவில்லையோ அவர்கள் ஹிஜ்ரா செல்லும் வரை எந்த ஒன்றுக்கும் அவர்களுக்கு பொறுப்பேற்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. மார்க்கத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுவது உங்கள் மீது கடமையாகும். (எனினும்,) உங்களுக்கும் அவர்களுக்கிடையில் உடன்படிக்கை உள்ள ஒரு சமுதாயத்திற்கு எதிராக தவிர. (உடன்படிக்கை செய்து கொண்டவர்களுக்கு எதிராக உதவுவது ஆகுமானதல்ல.) அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நம்பிக்கை கொண்டு, (தங்கள் ஊரை விட்டு வெளியேறி) ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருள்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள்; இன்னும், (இவர்களை) அரவணைத்து, உதவியவர்கள் இவர்கள், - இவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவர். இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு; ஆனால், ஹிஜ்ரத் செல்லவில்லையோ அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வரை எந்த ஒரு காரியத்திற்கும் அவர்களுக்காக பொறுப்பேற்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. இன்னும், மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவிதேடினால் (அவர்களுக்கு) உதவுவது உங்கள் மீது கடமையாகும். (எனினும்,) உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கை உள்ள ஒரு சமுதாயத்திற்கு எதிராக தவிர. (உடன்படிக்கை செய்தவர்களுக்கு எதிராக உதவுவது ஆகுமானதல்ல.) அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi72. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரை நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70