caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 71

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:71

وَإِن يُرِيدُوا۟ خِيَانَتَكَ فَقَدْ خَانُوا۟ ٱللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்கள் உமக்கு மோசடி செய்ய நாடினால் (இதற்கு) முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கு(ம்) மோசடி செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீது (அல்லாஹ் உங்களுக்கு) ஆதிக்கமளித்தான். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) ஆனால், அவர்கள் உமக்கு மோசடி செய்ய நாடினால் (இதற்கு) முன்னர் அவர்கள் அல்லாஹ்விற்கு(ம்) மோசடி செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீது (அல்லாஹ் உங்களுக்கு) ஆதிக்கமளித்தான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi71. (நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர்.) இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் சதி செய்யக் கருதினார்கள். ஆதலால்தான் அவர்களைச் சிறைப்படுத்த (உங்களுக்கு) வசதியளித்தான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70