caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:18

قَالَ ٱخْرُجْ مِنْهَا مَذْءُومًا مَّدْحُورًا لَّمَن تَبِعَكَ مِنْهُمْ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكُمْ أَجْمَعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நீ இகழப்பட்டவனாக, (கருணையி லிருந்து) விரட்டப்பட்டவனாக இதிலிருந்து வெளியேறு. அவர்களில் உன்னைப் பின்பற்றியவர் (மற்றும் நீ ஆக), உங்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நிச்சயம் நிரப்புவேன்” என்று கூறினான் (இறைவன்).
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்) கூறினான்: “நீ இகழப்பட்டவனாக, (கருணையிலிருந்து) விரட்டப்பட்டவனாக இதிலிருந்து வெளியேறு. அவர்களில் உன்னைப் பின்பற்றியவர் (மற்றும் நீ), உங்கள் அனைவராலும் நரகத்தை நிச்சயம் நிரப்புவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi18. (அதற்கு இறைவன்) ‘‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70