caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:19

وَيَٰٓـَٔادَمُ ٱسْكُنْ أَنتَ وَزَوْجُكَ ٱلْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசித்திரு(ங்கள்). நீங்கள் இருவரும் நாடிய இடத்தில் புசியுங்கள். இந்த மரத்தை நெருங்காதீர்கள். (அதனால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” (என்றான் இறைவன்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் நாடிய இடத்தில் புசியுங்கள். இந்த மரத்தை நெருங்காதீர்கள். அப்படி நெருங்கினால் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi19. (பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நீர் உமது மனைவியுடன் இச்சோலையில் வசித்திரும். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில்கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்'' (என்று கூறினான்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70