caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:17

ثُمَّ لَـَٔاتِيَنَّهُم مِّنۢ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَٰنِهِمْ وَعَن شَمَآئِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَٰكِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“பிறகு, அவர்களுக்கு முன் புறத்திலிருந்தும், அவர்களுக்கு பின் புறத்திலிருந்தும் அவர்களின் வலது புறத்திலிருந்தும், அவர்களின் இடது புறத்திலிருந்தும் நிச்சயம் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்” (என்றும் கூறினான்).
Tamil Translation - Omar Sharif“பிறகு, அவர்களுக்கு முன் புறத்திலிருந்தும், அவர்களுக்கு பின் புறத்திலிருந்தும் அவர்களின் வலது புறத்திலிருந்தும், அவர்களின் இடது புறத்திலிருந்தும் நிச்சயம் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்.”
Tamil Translation - Abdulhamid Baqawi17. ‘‘பிறகு, நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்'' என்றும் கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70