caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 68

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:68

وَإِذَا رَأَيْتَ ٱلَّذِينَ يَخُوضُونَ فِىٓ ءَايَٰتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا۟ فِى حَدِيثٍ غَيْرِهِۦ وَإِمَّا يُنسِيَنَّكَ ٱلشَّيْطَٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ ٱلذِّكْرَىٰ مَعَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நம் வசனங்களில் (அவற்றை பரிகசித்து) மூழ்குபவர்களைக்கண்டால், அவர்கள் அது அல்லாத (வேறு) பேச்சில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக. ஷைத்தான் உம்மை மறக்கடித்தால், நினைவுக்குப் பின்னர் அநியாயக்கார கூட்டத்துடன் அமராதீர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நம் வசனங்களில் (அவற்றை கேலி செய்வதில்) மூழ்குபவர்களைக் கண்டால், அவர்கள் அது அல்லாத (வேறு) பேச்சில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக. ஷைத்தான் உம்மை மறக்கடித்தால், நினைவு வந்த பின்னர் அநியாயக்கார கூட்டத்துடன் அமராதீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்குபவர்களை நீர் கண்டால், அவர்கள் அதைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரை நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (இக்கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீரும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70