قُلْ أَىُّ شَىْءٍ أَكْبَرُ شَهَٰدَةً قُلِ ٱللَّهُ شَهِيدٌۢ بَيْنِى وَبَيْنَكُمْ وَأُوحِىَ إِلَىَّ هَٰذَا ٱلْقُرْءَانُ لِأُنذِرَكُم بِهِۦ وَمَنۢ بَلَغَ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ ٱللَّهِ ءَالِهَةً أُخْرَىٰ قُل لَّآ أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَٰهٌ وَٰحِدٌ وَإِنَّنِى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: “எந்த ஒரு பொருள் சாட்சியால் மிகப் பெரியது?” (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் (சாட்சியால் மிகப் பெரியவன்)! (அவன்) எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன். இந்த குர்ஆன் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் உங்களையும், அது சென்றடைந்தவரையும் நான் எச்சரிப்பதற்காக. நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான்) சாட்சி கூறமாட்டேன்!” (நபியே நீர்) கூறுவீராக: “அவனெல்லாம் வணங்கப்படும் ஒரே ஒரு கடவுள்தான். நீங்கள் இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்.”
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “எந்த பொருள் சாட்சியால் மிகப் பெரியது?” (நபியே!) கூறுவீராக: “(சாட்சியால் மிகப் பெரியவன்) அல்லாஹ்தான்! (அவன்) எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன் ஆவான். இன்னும், இந்த குர்ஆன் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் உங்களையும், அது யாருக்கு சென்றடைகிறதோ அவரையும் நான் எச்சரிப்பதற்காக. நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான் அதற்கு) சாட்சி கூறமாட்டேன்!” (நபியே நீர்) கூறுவீராக: “அவன் எல்லாம் வணங்கப்படுவதற்கு தகுதியான ஒரே ஓர் இறைவன்தான். (பலர் அல்ல.) இன்னும், நிச்சயமாக நான் நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகியவன் ஆவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi19. (நபியே!) ‘‘சாட்சிகளில் மிகப் பெரியது எது?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (அவர் களால் என்ன கூறமுடியும்? நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வே! (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கிறான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக, (உண்மையாகவே) நீங்கள் சாட்சி கூறுவீர்களா?'' (என்றும் அவர்களை) நீர் கேட்பீராக. (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன! ‘‘அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன்!'' என்று நீர் கூறிவிட்டு, ‘‘நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவன்தான்; (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதை விட்டு மெய்யாகவே நான் வெறுத்து விலகுகின்றன்'' என்றும் கூறுவீராக.