caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:20

ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمُ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(முன்னர்) வேதத்தை நாம் எவர்களுக்கு கொடுத்தோமோ அவர்கள் தங்கள் குழந்தைகளை அறிவதைப் போல் அதை (-அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்பதையும் நபி உண்மையானவர் என்பதையும்) அறிவார்கள். தங்களுக்கு நஷ்டமிழைத்தவர்கள், அவர்கள் (அதை) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(முன்னர்) வேதத்தை நாம் எவர்களுக்கு கொடுத்தோமோ அவர்கள் தங்கள் குழந்தைகளை அறிவதைப் போல் அ(ல்லாஹ் ஒருவன்தான் வணங்கத்தகுதியானவன்; இன்னும் முஹம்மத் நபி உண்மையானவர் என்ப)தை அறிவார்கள். எவர்கள் தங்களுக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்களோ அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப்போல, வேதம் கொடுக்கப் பட்டவர்கள் (நம் தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தான் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70