أَوْ تَقُولُوا۟ لَوْ أَنَّآ أُنزِلَ عَلَيْنَا ٱلْكِتَٰبُ لَكُنَّآ أَهْدَىٰ مِنْهُمْ فَقَدْ جَآءَكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَّبَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَصَدَفَ عَنْهَا سَنَجْزِى ٱلَّذِينَ يَصْدِفُونَ عَنْ ءَايَٰتِنَا سُوٓءَ ٱلْعَذَابِ بِمَا كَانُوا۟ يَصْدِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது "நம்மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக நாம் அவர்களைவிட அதிகம் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருப்போம்” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை அருளினோம்). ஆகவே, உங்கள் இறைவனிடமிருந்து, மிகத் தெளிவான சான்றும் நேர்வழியும் கருணையும் உங்களிடம் வந்துவிட்டது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்து அவற்றை விட்டு விலகியவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நம் வசனங்களைவிட்டு (இவ்வாறு) விலகியவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டிருந்ததன் காரணமாக கெட்ட வேதனையை கூலி(யாகக்) கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharifஅல்லது, “நம்மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக நாம் அவர்களை விட அதிகம் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருப்போம்” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை உங்களுக்கு அருளினோம்). ஆக, உங்கள் இறைவனிடமிருந்து, மிகத் தெளிவான சான்றும் நேர்வழியும் கருணையும் உங்களிடம் வந்துவிட்டது. ஆக, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை விட்டு விலகியவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நம் வசனங்களைவிட்டு (இவ்வாறு) விலகியவர்களுக்கு அவர்கள் (உண்மையைவிட்டு) விலகிக் கொண்டிருந்ததன் காரணமாக கெட்ட தண்டனையை கூலியாகக் கொடுப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi157. அல்லது ‘‘நிச்சயமாக நமக்காக ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்'' என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை அருளினோம். ஆகவே,) உங்கள் இறைவனிடம் இருந்து, மிகத் தெளிவான (வசனங்களையுடைய) வேதம் உங்களிடம் வந்துவிட்டது. (அது) நேரான வழியாகவும் (இறைவனுடைய) அருளாகவும் இருக்கிறது. ஆகவே, எவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? நம் வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.