أَن تَقُولُوٓا۟ إِنَّمَآ أُنزِلَ ٱلْكِتَٰبُ عَلَىٰ طَآئِفَتَيْنِ مِن قَبْلِنَا وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمْ لَغَٰفِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இணைவைப்போரே!) வேதம் இறக்கப்பட்டதெல்லாம் நமக்கு முன்னர் (சென்ற யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய) இரு கூட்டங்கள் மீதுதான், நாங்கள் அவர்க(ள் படித்த வேதங்க)ளின் படிப்பை விட்டு கவனமற்றவர்களாகவே நிச்சயம் இருந்தோம் என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக (இந்த வேதத்தை உங்களுக்கு இறக்கினோம்).
Tamil Translation - Omar Sharif(இணைவைப்பவர்களே!) “வேதம் இறக்கப்பட்டதெல்லாம் நமக்கு முன்னர் (சென்ற யூதர்கள், கிறித்தவர்கள் ஆகிய) இரு கூட்டங்கள் மீதுதான். நாங்கள் அவர்க(ள் படித்த வேதங்க)ளின் படிப்பறிவை அறியாதவர்களாகவே நிச்சயமாக இருந்தோம் என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக (இந்த வேதத்தை உங்களுக்கு இறக்கினோம்).
Tamil Translation - Abdulhamid Baqawi156. (இணைவைத்து வணங்கும் அரபிகளே!) ‘‘நமக்கு முன்னர் (யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய) இரு கூட்டத்தினர் மீது (மட்டுமே) வேதம் அருளப்பட்டது. ஆகவே, (அவர்களுடைய மொழி எங்களுக்குத் தெரியாததால்) நாங்கள் அவர்களிடம் அதைப் படிக்கவும், படித்துக் கேட்கவும் முடியாமல் பராமுகமாகி விட்டோம்'' என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும்.