caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 121

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:121

وَلَا تَأْكُلُوا۟ مِمَّا لَمْ يُذْكَرِ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ وَإِنَّهُۥ لَفِسْقٌ وَإِنَّ ٱلشَّيَٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوْلِيَآئِهِمْ لِيُجَٰدِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றிலிருந்து புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பாவம்தான். உங்களுடன் அவர்கள் தர்க்கிப்பதற்காக நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களுக்கு அறிவிக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் இணை வைப்பவர்கள்தான்!
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றிலிருந்து புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பாவமாகும். உங்களிடம் அவர்கள் தர்க்கிப்பதற்காக நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi121. (நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாத வற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70