أَوَمَن كَانَ مَيْتًا فَأَحْيَيْنَٰهُ وَجَعَلْنَا لَهُۥ نُورًا يَمْشِى بِهِۦ فِى ٱلنَّاسِ كَمَن مَّثَلُهُۥ فِى ٱلظُّلُمَٰتِ لَيْسَ بِخَارِجٍ مِّنْهَا كَذَٰلِكَ زُيِّنَ لِلْكَٰفِرِينَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் மரணித்தவராக இருந்து, அவரை நாம் உயிர்ப்பித்து, மக்களுக்கு மத்தியில் அவர் நடமாடுவதற்கு அவருக்கு ஓர் ஒளியையும் நாம் ஏற்படுத்தினோமோ அவர் - எவர் இருள்களில் இருந்து கொண்டு, அவற்றிலிருந்து வெளியேறமுடியாதவராக இருக்கிறாரோ அவரைப் போல் ஆவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை அழகாக்கப்பட்டன.
Tamil Translation - Omar Sharifஎவர் மரணித்தவராக இருந்து, அவரை நாம் உயிர்ப்பித்து, அவர் மக்களுக்கு மத்தியில் நடமாடுவதற்கு ஓர் ஒளியையும் அவருக்கு நாம் ஏற்படுத்தினோமோ அவர், யார் இருள்களில் இருந்து கொண்டு அவற்றிலிருந்து வெளியேறாமல் இருக்கிறாரோ அவரைப் போன்று ஆவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை அலங்கரிக்கப்பட்டன.
Tamil Translation - Abdulhamid Baqawi122. (வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய)செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன.